News September 28, 2025

பெரம்பலூர் மாணவனுக்கு தங்க பதக்கம் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவன் செங்குணம் சி.ஆகாஷ் பங்கேற்று உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார். இம்மாணவனுக்கு (செப்.27) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Similar News

News January 21, 2026

பெரம்பலூர்: கல்லூரி மாணவி தற்கொலை – சோகம்

image

பெரம்பலூர் மாவட்டம் வரகூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மொழி(20). இவர் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் செம்மொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரம்பலூர், அரனாரை, எளம்பலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News January 20, 2026

பெரம்பலூர்: பில்லி சூனியம் நீங்க… இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவச்சீர் அருகே மலையில் அமைந்துள்ளது பெரியசாமி கோயில். இக்கோயிலில் உள்ள செல்லியம்மனுக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!