News September 28, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
விழுப்புரம்: மருமகன் கண்முன்னே மாமனார் பலி!

விழுப்புரம்: முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம். இவரது மருமகன் குணசேகரனுடன் நேற்று புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மீண்டும் விழுப்புரத்தை நோக்கி திரும்பியபோது, கெங்கராம்பாளையம் அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், குணசேகரன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
விழுப்புரத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பாலாமணி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 22ம் தேதி மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.


