News September 28, 2025

கரூர்:10ஆயிரம் பேருக்கு அனுமதி; மீறப்பட்டதால் துயரம்

image

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப். 27) நடைபெற்ற த.வெ.க. கூட்டத்திற்கு, 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று போலீஸிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் கூட்டத்தில் மீறப்பட்டன. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக நெரிசல் (Stampede) காரணமாகவே இந்தத் துயரமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

Similar News

News January 5, 2026

கரூர்: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓட்டப்பட்டி சேர்ந்த தாமரைச்செல்வி (36), நடராஜன் குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், தாமரைச்செல்வியை தகாத வார்த்தைகள் கூறி திட்டி, குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நடராஜன் (55), பெரியக்காள் (50), சதீஷ்குமார் (31) ஆகிய 3 பேருக்கு எதிராக தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 5, 2026

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என காவல்துறை தெரிவித்துள்ளது. அவசரநிலைகளில் கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780, அவசர உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

குளித்தலை: மகளைக் காப்பாற்ற.. தந்தை உயிரிழந்த சோகம்

image

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!