News September 28, 2025
விஜய்க்கு வந்துள்ள சோதனை

கரூர் துயர நிகழ்வானது, விஜய்யை வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது அவரது தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ள சோதனையாகவும் உள்ளது. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் வெளிப்படையான, உறுதியான பதிலையும், விளக்கத்தையும் அளித்தாக வேண்டும். அதை செய்ய தவறும் நிலையில், அது விஜய் மீது நிரந்தர கறையாக மாறிவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Similar News
News January 13, 2026
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

*அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம். *பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். *அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. *எதையாவது நீங்கள் நம்புவதால் மட்டுமே, அது உண்மை என்று அர்த்தமாகாது. *3 பெரிய சக்திகள் உலகை ஆளுகின்றன: முட்டாள்தனம், பயம் மற்றும் பேராசை.
News January 13, 2026
இந்தியர்களுக்கு ஜெர்மனி சிறப்பு அறிவிப்பு

ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், இந்தியர்களுக்கு Visa-Free Transit வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனி விமான நிலையங்கள் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் இந்தியப் பயணிகள் இனி தனி போக்குவரத்து விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
News January 13, 2026
T20WC: வங்கதேச போட்டிகள் மாற்றமா?

டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை மாற்றுவது குறித்து ICC எந்த ஒரு அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என BCCI தெரிவித்துள்ளது. இது BCB – ICC இடையிலான விவகாரம் என்றும், ICC மாற்ற சொன்னால் பரிசீலிப்போம் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் கொல்கத்தாவில் நடக்க இருந்த போட்டிகள் சென்னை, திருவனந்தபுரத்திற்கு மாற்ற ICC முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.


