News September 28, 2025
காவல்துறை கட்டுப்பாட்டில் கரூர்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பலர் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளதால், கரூர் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, கரூர் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
Similar News
News February 6, 2026
கரூரில் 240 பெண்கள் அதிரடி கைது!

கரூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பினர் மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதல், காலமுறை ஊதியம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பத்மாதேவி தலைமையில் போராட்டம் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
News February 6, 2026
கரூருக்கு பெருமை சேர்த்த 8 வயது சிறுமி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிமேடு பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மகள் சன்மதி (8). இவர் உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பென்சக் சிலாட்’ (Pencak Silat) தற்காப்பு கலைப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த இச்சிறுமியைப் பாராட்டி, பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
News February 6, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


