News September 28, 2025
கரூர் துயரம் மிகுந்த வலியை தருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

கரூர் துயரம் வேதனை அளிப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியை தருவதாக அவர், X-ல் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் எனவும் கவர்னர் கூறியுள்ளார்.
Similar News
News January 19, 2026
Cinema 360°: ₹11 கோடி வசூலித்த TTT

*ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ 3 நாள்களில் ₹11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் *சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ டிரெய்லர் இன்று வெளியாகிறது *விக்ரம் பிரபுவின் சிறை ஜன.23-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *ரவி மோகனின் BRO CODE படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்
News January 19, 2026
மகாத்மா காந்தி பொன்மொழிகள்

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்
News January 19, 2026
திருப்திப்படுத்துவது கோர்ட்டின் கடமை அல்ல: சந்திரசூட்

திருப்திப்படுத்துவது அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே கோர்ட்டின் கடமை என உமர்காலித் குறித்த கேள்விக்கு Ex SC தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் UAPA போன்ற கடும் சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என விமர்சித்துள்ளார். டெல்லி கலவர வழக்கில் கைதான இமாம் & உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


