News September 28, 2025

தவெக தலைவர்கள் எங்கே?

image

கரூரில் இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. அரசு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சூழலில் தவெக தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவில்லை. விஜய்யின் பதிலுக்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சூழலை எதிர்கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News September 28, 2025

கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

image

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்‌ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

News September 28, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 28, புரட்டாசி 12 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:8:00 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News September 28, 2025

யாருக்காக மாய்கின்றன இந்த உயிர்கள்?

image

நட்சத்திரங்கள் தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டும் கூட்டத்தில் அப்பாவி ரசிகர்கள் பலியாகின்றனர். அரசியல்வாதிகளின் பலத்தை காட்ட, அப்பாவி தொண்டர்கள் பலியாகின்றனர். சிலரின் லாபங்களுக்காக பல அப்பாவி குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கரூரின் குறுகிய சாலைக்குள் பல்லாயிரம் பேரை கூட்டியது தவறென்றால், இவ்வளவு பெரும் கூட்டத்துக்கு சிறு சாலையில் அனுமதி அளித்ததும் தவறுதானே? இதற்கெல்லாம் முடிவு எப்போது?

error: Content is protected !!