News September 28, 2025
தேசிய அளவில் #Karur டிரெண்டிங்

கரூர் துயரம் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 36 பேர் உயிரிழந்த நிலையில், X-ல் #Karur, #TVKCampaign, #Tamil Nadu, #கரூர் ஆகியவை டிரெண்டிங்கில் உள்ளன. இதையடுத்து தேசிய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக மாறியது

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து நிம்மதியை கொடுத்த நிலையில், மாலையில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று 2-வது முறையாக மாற்றம் கண்ட தங்கம் விலை, சவரனுக்கு ₹1,040 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,250-க்கும், 1 சவரன் ₹1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,200 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு அங்கம்: செபாஸ் ஷெரீப்

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணையாக இருக்கும் என பாக்., PM செபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீர்(PoK) சட்டமன்றத்தில் பேசிய அவர், காஷ்மீர் பாகிஸ்தானின் ஒர் அங்கமாக மாறும் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’ என்று பாக்., நிறுவனர் முகமது அலி ஜின்னா கூறியதே, தங்கள் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை எனவும் குறிப்பிட்டார்.
News February 6, 2026
அதிமுகவுடன் கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

தேர்தல் நெருங்குவதையொட்டி, சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் (ம) தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன் இன்று EPS-ஐ சந்தித்தார். அப்போது, அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.


