News September 28, 2025
சென்னையில் இருந்து கரூர் புறப்பட்டார் EPS

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து கரூர் விரைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
Similar News
News January 14, 2026
சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சென்னையில் பிரம்மாண்ட வண்ணமீன் திருவிழா!

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் “வண்ணமீன் வர்த்தகத் திருவிழா” நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான வண்ணமீன் விற்பனை மையங்கள், நீர்வாழ் காட்சியகம் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன.
News January 14, 2026
சென்னை: பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு!

சென்னையில் பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு விற்பனையில் பிரபல இனிப்பு கடாயில் வனஸ்பதி பயன்பாடு எனப் புகார் எழுந்துள்ளது. நெய்க்கு பதிலாக பாதிக்குப் பாதி வனஸ்பதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் 500 டன் அளவுக்கு இனிப்புகள் வனஸ்பதி மூலம் தயாரித்து ரூ.5 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


