News September 28, 2025

கரூர் சம்பவத்தால் மனவேதனை: பவன் கல்யாண்

image

விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திரா DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News January 21, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 587 ▶குறள்: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. ▶பொருள்: மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

News January 21, 2026

விஜய்யை விளாசிய கருணாஸ்

image

திமுகவை தீய சக்தி என விமர்சிக்கும் விஜய் என்ன சக்தி என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் முதலில் தமிழனாக இருக்க வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாக்கு உங்களுக்கு வேண்டும், ஆனால் அவர்களின் வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா எனவும் கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.

News January 21, 2026

இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு

image

சுவீட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான வரவேற்பு நிகழ்ச்சிக்கு 7 இந்திய தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ், இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக், பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் சஞ்சீவ், மஹிந்திரா CEO அனிஷ் ஷா மற்றும் ஜூபிலண்ட் தலைவர் பார்தியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!