News September 28, 2025

விஜய் பேசும்போதே நிகழத் தொடங்கிய மரணங்கள்

image

கரூருக்கு விஜய் வருவதற்கு முன்பே மரண ஓலத்திற்கான அறிகுறி இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கடங்கா கூட்டம் கூடியதால், தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அதன்பின், மக்கள் மத்தியில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மரணங்கள் நிகழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், பெரும் துயரத்தை தடுத்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 28, 2025

கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

image

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்‌ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

News September 28, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 28, புரட்டாசி 12 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:8:00 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News September 28, 2025

யாருக்காக மாய்கின்றன இந்த உயிர்கள்?

image

நட்சத்திரங்கள் தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டும் கூட்டத்தில் அப்பாவி ரசிகர்கள் பலியாகின்றனர். அரசியல்வாதிகளின் பலத்தை காட்ட, அப்பாவி தொண்டர்கள் பலியாகின்றனர். சிலரின் லாபங்களுக்காக பல அப்பாவி குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கரூரின் குறுகிய சாலைக்குள் பல்லாயிரம் பேரை கூட்டியது தவறென்றால், இவ்வளவு பெரும் கூட்டத்துக்கு சிறு சாலையில் அனுமதி அளித்ததும் தவறுதானே? இதற்கெல்லாம் முடிவு எப்போது?

error: Content is protected !!