News September 28, 2025
கரூர் துயரம் நெஞ்சை பதைக்கிறது: கமல்ஹாசன்

கரூர் துயரச் சம்பவம் நெஞ்சை பதைக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வார்த்தைகளின்றித் திகைக்கிறேன் என்றும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
FLASH: தொடர் சரிவால் தடுமாறும் இந்திய சந்தைகள்!

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளாகவும் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமுள்ள 4,252 நிறுவனங்களில் 3,189 நிறுவன பங்குகள் இச்சரிவை சந்தித்ததால், ₹6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு அன்று 85,451-ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 2,600 புள்ளிகள் சரிந்துள்ளது.
News January 12, 2026
இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!
News January 12, 2026
18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.


