News September 28, 2025

கரூர் துயரம்: கனிமொழி இரங்கல்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனிமொழி MP இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், CM போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 6, 2026

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக: பியூஷ் கோயல்

image

<<18776534>>திருப்பரங்குன்றம் வழக்கில்<<>> இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை தாக்குவதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்திலும் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

News January 6, 2026

இதுவரை 15 படங்கள்.. பொங்கல் ரிலீஸ் விஜய்க்கு ராசியானதா?

image

33 ஆண்டுகால சினிமா பயணத்தின் இறுதி தருணத்தில் விஜய் நிற்கிறார். அவரின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நேரத்தில், ஒரு சின்ன Rewind போட்டு, பொங்கல் ரிலீஸ் விஜய் படங்கள் எந்தளவு ராசியானதா? என்பதை தெரிஞ்சுக்க, மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. இந்த லிஸ்ட்டில் இருக்குற படங்களில் எதை, எந்த தியேட்டரில் பாத்தீங்க?

News January 6, 2026

போப் மறைவால் ரோம் படைத்த சாதனை!

image

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆண்டில் சுமார் 3.35 கோடி சுற்றுலா பயணிகள் ரோமுக்கு வந்துள்ளதாக இத்தாலிய அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு மற்றும் புதிய போப் லியோவின் பதவியேற்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் அமைதி, மன்னிப்புக்கான காலமாக 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புனித ஆண்டில் அங்குள்ள புனித வாசல்களில் நுழையவும் அதிக பயணிகள் ரோமுக்கு சென்றுள்ளனர்.

error: Content is protected !!