News April 14, 2024

தோனியை ‘தல’ என்று அழைக்க இதுதான் காரணம்!

image

CSK அணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட முக்கிய காரணமாக இருப்பதால் தான் தோனியை எல்லோரும் ‘தல’ என அழைக்கின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். தோனி குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் பல நாடுகளில் இருந்து வரும் வீரர்களில் சிலர் விளையாடுவர், சிலர் பெஞ்சில் அமருவர். அவர்கள் அனைவரையும் டீமாக ஒன்றிணைத்தால் தான் கோப்பையை வெல்ல முடியும். இதனை செய்யக்கூடிய திறன் அவரிடம் உள்ளது” எனக் கூறினார்.

Similar News

News December 29, 2025

குழந்தையின் பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க டிப்ஸ்

image

உங்கள் குழந்தையின் பற்கள் சொத்தையாகாமல் இருக்கணுமா? சில எளிய முறைகள் மூலம் அவர்களது பற்களை பாதுகாக்கலாம். ➤சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிப்பது நல்லது ➤காலை, இரவு என 2 வேளை பல் துலக்க வேண்டும் ➤மிருதுவான பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டியது அவசியம் ➤சாக்லேட்டுகளை கடித்து சாப்பிட வேண்டாம். ➤நார்ச்சத்து நிறைந்த பழங்களை கொடுப்பது நல்லது. SHARE.

News December 29, 2025

கனிமொழியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

image

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கனிமொழி திருப்பூரில் நடைபெற்றுவரும் திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

கில்லால் அனைத்து ஃபார்மெட் கேப்டனாக முடியாது: Ex வீரர்

image

சுப்மன் கில் திறமையான வீரர்தான், ஆனால் பல நேரங்களில் சோம்பேறித்தனமான ஷாட்களை அடிப்பதாக Ex ENG வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தீவிரமும், ஆக்ரோஷமும் அனைத்து ஃபார்மெட் போட்டிகளிலும் வெளிப்பட்டதாகவும், ஆனால் அதை கில்லால் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கில்லால் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!