News September 27, 2025
தலைமைச் செயலகத்தில் CM அவசர ஆலோசனை

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் CM ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். தலைமை செயலாளர் முருகானந்தம், அமைச்சர் நேரு, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சென்னை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்

சென்னை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*கபாலீஸ்வரர் கோயில் (மயிலாப்பூர்)
*பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி)
*வடபழனி ஆண்டவர் கோயில்
*காலிகாம்பாள் கோயில் (சென்னைப் பஜார்)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


