News September 27, 2025
கரூர் துயரத்திற்கு காரணம் என்ன?

கரூர் கூட்ட நெரிசலுக்கு, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் குறுகிய இடமாக இருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. விஜய்யை காண நீண்ட நேரமாக அங்கு மக்கள் காத்திருந்தனர். மாலை என்பதால் குழந்தைகள், சிறுவர்களையும் அதிகளவில் உடன் அழைத்து வந்துள்ளனர். விஜய் வந்தபோது அங்கு நிற்க இடமின்றி பலர் மரம், கம்பங்களில் ஏறியுள்ளனர். விஜய் சென்ற பிறகே மயக்கமடைந்தவர்களை மீட்க முடிந்ததாக போலீசார் கூறியதாக தெரிகிறது.
Similar News
News September 28, 2025
யாருக்காக மாய்கின்றன இந்த உயிர்கள்?

நட்சத்திரங்கள் தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டும் கூட்டத்தில் அப்பாவி ரசிகர்கள் பலியாகின்றனர். அரசியல்வாதிகளின் பலத்தை காட்ட, அப்பாவி தொண்டர்கள் பலியாகின்றனர். சிலரின் லாபங்களுக்காக பல அப்பாவி குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கரூரின் குறுகிய சாலைக்குள் பல்லாயிரம் பேரை கூட்டியது தவறென்றால், இவ்வளவு பெரும் கூட்டத்துக்கு சிறு சாலையில் அனுமதி அளித்ததும் தவறுதானே? இதற்கெல்லாம் முடிவு எப்போது?
News September 28, 2025
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

தவெக கூட்டத்தில் நடைபெற்ற துயரத்தால், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324-256306, 7010806322 உள்ளிட்ட எண்கள் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டத்தில் குழந்தைகள் சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.