News September 27, 2025
கரூர் துயரம்: தமிழக அரசு எச்சரிக்கை!

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில், பொய்யான தகவல்களை பரபரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சிக்கலான நேரத்தில் மேலும் பதட்டத்தை உருவாக்க வேண்டாம் எனவும், தவறான தகவல் மற்றும் வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
கரூர் வேலைக்கு வந்த இடத்தில் சோகம்!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டோலி (23), கரூர் அப்பிபாளையத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் இருந்தபோது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை
News January 31, 2026
கரூர் செய்தியாளர்களுக்கு நேர்ந்த கதி: விஜயபாஸ்கர் கண்டனம்

கிருஷ்ணராயபுரம் அருகே கனிமவள கொள்ளையை செய்தி சேகரிக்க செய்தியாளர் கதிரவன்,ஒளிப்பதிவாளர் செபஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என EX எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்டனம்: மேலும்
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே, செய்தியாளர்களை தாக்கியுள்ளனர். இது சட்டத்தின் ஆட்சியா? இல்லை ரவுடிகளின் ராஜ்ஜியமா? என கேள்வி
News January 31, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


