News September 27, 2025
கரூர் சோகம்: அரசை சாடும் அண்ணாமலை

விஜய்யின் கரூர் பரப்புரையில் தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய ஏற்பாடுகளை செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். பரப்புரையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார தடை குறித்து முழு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 12, 2026
10 நிமிடங்களில் முடங்கிடும்.. பாஜகவுக்கு UBT நேரடி வார்னிங்

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி, மராட்டிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய MP சஞ்சய் ராவத் (சிவசேனா UBT), தாக்கரே குடும்பத்தை அழிக்க முடியாது; தங்களால் 10 நிமிடத்தில் மும்பையை முடக்கி விட முடியும் என எச்சரித்தார். இதற்கு, பால் தாக்கரே உயிரோடு இருந்தபோது முடக்கம் சாத்தியம்; இப்போது தாக்கரே சகோதரர்களால் ஒன்றும் செய்ய முடியாது என CM தேவேந்திர ஃபட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
News January 12, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சம்!

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 (இந்திய மதிப்பில் ₹7,490) உயர்ந்து $4,575-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $83-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று 9:30 மணிக்கு தங்கம், வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
News January 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க உடன்பாடில்லை: வைகோ

திமுகவை ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என வைகோ கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி வைத்ததாக கூறிய அவர், இந்த முடிவில் எப்போதும் உறுதியாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் பேசியுள்ளார்.


