News September 27, 2025
கரூர் துயரம்: PM மோடி இரங்கல்

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம் பெரும் வேதனை அளிப்பதாகவும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருப்போர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் PM மோடி பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 2, 2026
காங்கிரஸில் இருந்து விலகல்.. தவெகவில் இணைய முடிவா?

தமிழ்நாடு காங்கிரஸின்(TNCC) சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சூர்யபிரகாசம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் அடிமை கூடாரமாக TN காங்கிரஸை மாற்ற செல்வப்பெருந்தகை முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்மை காலமாக விஜய்க்கு ஆதரவாக சூர்யபிரகாசம் பேசிவந்தார். TNCC அழிவின் பாதையில் பயணிப்பதாக <<18740431>>ஜோதிமணி கூறியிருந்த<<>> நிலையில், சூர்யபிரகாசத்தின் விலகல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 2, 2026
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்த பங்குச்சந்தை

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து, 85,762-க்கும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328-க்கு வர்த்தகமாகியுள்ளது. மேலும் VI, HDFC Bank, Reliance, Coal India நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம் ITC, Shriram Finance, Nestle உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு இன்று சரிவை சந்தித்துள்ளன.
News January 2, 2026
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

CBSE-ல் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி (SKILL EDUCATION) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கணிதம், அறிவியல் போல திறன் சார் கல்வியும் இனி ஒரு பாடமாக இருக்கும். இதில், AI, கோடிங், கைவினை பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்து கொள்ளலாம்.


