News September 27, 2025
கரூர் விரையும் CM ஸ்டாலின்

கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில், CM ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதேபோல், சம்பவ இடத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில், நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார்.
Similar News
News January 13, 2026
Night முழுக்க சார்ஜ் போடுறீங்களா? உஷார்!

காலையில் எழுந்ததும் 100% சார்ஜ் இருக்கணும் என எண்ணி, இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுகிறோம். அப்படி செய்வதால் பேட்டரியின் செயல்திறன் குறையுமாம். தற்போது, போன்களில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரி நவீனரகம் என்றாலும், அதன் செயல்திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. நீண்ட நேரம் போன் சார்ஜில் இருந்தால், செயல்திறன் பாதிப்பதோடு, சமயங்களில் பேட்டரி சூடாகி, வெடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. SHARE.
News January 13, 2026
அமைச்சர் துரைமுருகனுக்கு ‘அண்ணா விருது’

2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் ‘அண்ணா விருது’ அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்த துரைமுருகன், இலக்கியம், அரசியல் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்; அவை முன்னவராக இருந்து சட்டப்பேரவையின் கண்ணியத்தை காக்கும் அவருக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக CM தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
இடியுடன் கூடிய மழை வெளுக்கும்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


