News September 27, 2025

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்தரயில் மதியம் 12. 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் திங்கட்கிழமை மதியம் 3:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில்மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில்வந்து சேரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News January 13, 2026

குமரியில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.15 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சுற்றுலா மையங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, லெமூர் கடற்கரை, சொத்த விளை, சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மற்றும் பொது இடங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News January 13, 2026

குமரி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

image

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் செய்து <<>>செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

குமரி: முதலை நடமாட்டம் குறித்து வனத்துறை விளக்கம்

image

திற்பரப்பு அருகே கல்லு வரம்பு பகுதியில் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் பாறை மீது முதலை இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் அவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது வதந்தியாக இருக்க கூடும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!