News September 27, 2025
உடனே நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவு

கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 29 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளிக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தன் X-ல் பதிவிட்டுள்ள அவர், கரூரில் இருந்துவரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினை செய்துதர செந்தில்பாலாஜி, அமைச்சர் மா.சு., அன்பில் மகேஷ் & ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 28, 2025
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
அபிமன்யு ஓரங்கட்டப்பட இதுதான் காரணமா?

WI-க்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் <<17844595>>அபிமன்யு ஈஸ்வரன்<<>> அணியில் சேர்க்கப்படாததற்கு அவரது தந்தை தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அபிமன்யுவின் தந்தை BCCI-க்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அபிமன்யு அணியில் சேர்க்கப்பட்டாலும், இதுவரை Playing XI-ல் அவர் இடம்பெறவில்லை.
News September 28, 2025
விஜய் செல்லாதது ஏன்?

கரூர் துயரச் செய்தி வந்தவுடனே செ.பாலாஜி, அன்பில் மகேஸ் கரூர் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். CM ஸ்டாலினும் கூட கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில், விஜய் சென்னை திரும்பிவிட்டார். இந்நிலையில், பலரும் விஜய் ஏன் செல்லவில்லை எனக் கேட்கின்றனர். சம்பவத்தால் விஜய் மிகத் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாலும், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததாலும் தான் உடனடியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது.