News September 27, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

Similar News

News January 18, 2026

கிருஷ்ணகிரி: 3 பவுன் நகை தகராறில் வாலிபர் கைது!

image

கிருஷ்ணகிரி, பானாக்கார தெருவைச் சேர்ந்த வளையல் வியாபாரி அலமேலுவிடம், 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 3 பவுன் தங்கச் சங்கிலியைத் திருப்பித் தராதது குறித்துக் கேட்டபோது, அவரது அண்ணன் மகன் பிரபாகரன் (22) அவரை கல்லால் தாக்கி மிரட்டினார். பின், காயமடைந்த அலமேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பிரபாகரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 18, 2026

கிருஷ்ணகிரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: பண விவகாரத்தில் முற்றிய பகை – இருவர் கைது

image

ராயக்கோட்டையில் விஐபி நகரை சேர்ந்த விஜி 22 என்பவருக்கும் கும்மனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கடந்த ஜன-15 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் சேகர் 21,ராஜதுரை 23 இருவரும் விஜியை தாக்கியதால் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஜன-16 அன்று 2 பேரையும் இராயக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

error: Content is protected !!