News September 27, 2025
பாக். உடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டிய வாங்சுக்?

லடாக் கலவரத்திற்கு காரணமானவர் என கைது செய்யப்பட்ட <<17837503>>சோனம் வாங்சுக்கின்<<>> பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து விசாரித்து வருவதாக லடாக் DGP SD சிங் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வாங்சுக் பாக்., வங்கதேசத்திற்கு பயணித்துள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த பாக்., உளவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் DGP கூறியுள்ளார். மேலும், வன்முறையின் போது தானும் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 28, 2025
இதயம் நொறுங்கியது: விஜய் கண்ணீர்

கரூரில் நிகழ்ந்த துயரத்தால் இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 28, 2025
தவெக தலைவர்கள் எங்கே?

கரூரில் இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. அரசு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சூழலில் தவெக தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவில்லை. விஜய்யின் பதிலுக்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சூழலை எதிர்கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 28, 2025
தேசிய அளவில் #Karur டிரெண்டிங்

கரூர் துயரம் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 36 பேர் உயிரிழந்த நிலையில், X-ல் #Karur, #TVKCampaign, #Tamil Nadu, #கரூர் ஆகியவை டிரெண்டிங்கில் உள்ளன. இதையடுத்து தேசிய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.