News September 27, 2025
உயரங்களை தொட்ட ப.சுப்பராயன்

1926-ல் அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நீதிக்கட்சி ஆதரவுடன் மெட்ராஸ் மாகாண முதல்வரானார் <<17848853>>ப.சுப்பராயன்<<>>. அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாகாண சட்டம் மற்றும் கல்வி அமைச்சர் (1937-39), உள்துறை & காவல்துறை அமைச்சர் (1947-48), திருச்செங்கோடு எம்பி (1957-62), மத்திய போக்குவரத்து அமைச்சர் (1959-62), மகாராஷ்டிரா மாநில கவர்னர் (1962) பதவிகளை வகித்துள்ளார். இவர் 1962-ல் காலமானார்.
Similar News
News January 14, 2026
உதவ ஓடிவந்த டிரம்ப்பை கண்டித்த ரஷ்யா

ஈரானில் போராடுபவர்களுக்கு உதவிகள் தயாராக இருப்பதாக <<18850743>>டிரம்ப்<<>> தெரிவித்ததை ரஷ்யா கண்டித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அமெரிக்கா நாசவேலைகளை செய்ய முயற்சிப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்டு நடக்கும் போராட்டத்தை, அமெரிக்கா தனக்கு சாதமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.
News January 14, 2026
PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.


