News September 27, 2025

நடிகர் சத்யராஜ் வீட்டில் துயரம்.. நேரில் அஞ்சலி

image

நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரியின் தாயார் விசாலாட்சி சுந்தரம்(92) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு சத்யராஜ், மகன் சிபிராஜ், மகள் திவ்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடுமலை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில், கொடுமையான விசயம் என்னவென்றால் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். அவருக்கு தனது தாய் உயிரிழந்ததே தெரியாது. So Sad!

Similar News

News September 28, 2025

கரூர் துயரம்: துணை ஜனாதிபதி இரங்கல்

image

கரூர் துயரம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல்களை கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 28, 2025

BREAKING: கரூர் விரைந்தார் CM ஸ்டாலின்

image

தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு CM ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்ல உள்ளார். முன்னதாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ரகுபதி, Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

News September 28, 2025

விசில்கள் ஒப்பாரி ஓலமாக மாறியது: வன்னியரசு

image

சினிமா மோகம் தமிழகத்தில் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குமோ என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் துயரத்தை குறிப்பிட்டு X-ல் பதிவிட்டுள்ள அவர், எத்தனை லட்சம் பேர் திரண்டாலும் அரசியல்படுத்தப்பட்ட கூட்டம் பாதுகாப்பாக பயணிக்கும் என்றும் அரசியல்படுத்தப்படாத விசில்கள் தற்போது ஒப்பாரி ஓலமாக மாறியது எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!