News September 27, 2025
அட்டர்னி ஜெனரலின் பதவி காலம் நீட்டிப்பு

இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியின் பதவி காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். வரும் 30-ம் தேதியோடு அவரது பதவி காலம் முடிவடைய இருந்தது. நாட்டின் எந்த கோர்ட்டிலும் ஆஜராகும் உரிமை அட்டர்னி ஜெனரலுக்கு உண்டு. அரசாங்க வழக்குகளை கையாள்வதோடு, சிக்கலான சட்டப் பிரச்னைகள் குறித்தும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவார். வெங்கட்ரமணி புதுச்சேரியில் பிறந்தவர் ஆவார்.
Similar News
News September 28, 2025
கரூர் துயரம்: துணை ஜனாதிபதி இரங்கல்

கரூர் துயரம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல்களை கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
BREAKING: கரூர் விரைந்தார் CM ஸ்டாலின்

தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு CM ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்ல உள்ளார். முன்னதாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ரகுபதி, Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
News September 28, 2025
விசில்கள் ஒப்பாரி ஓலமாக மாறியது: வன்னியரசு

சினிமா மோகம் தமிழகத்தில் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குமோ என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் துயரத்தை குறிப்பிட்டு X-ல் பதிவிட்டுள்ள அவர், எத்தனை லட்சம் பேர் திரண்டாலும் அரசியல்படுத்தப்பட்ட கூட்டம் பாதுகாப்பாக பயணிக்கும் என்றும் அரசியல்படுத்தப்படாத விசில்கள் தற்போது ஒப்பாரி ஓலமாக மாறியது எனவும் அவர் கூறியுள்ளார்.