News September 27, 2025

1 – 7 பள்ளி மாணவர்களுக்கு.. அரசு புதிய அறிவிப்பு

image

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவ புத்தகங்கள் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட CEO-க்கள், DEO-க்கள் இந்த பணிகளை மேற்பார்வை செய்ய பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பல இடங்களில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 28, 2025

கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்

image

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 36 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News September 27, 2025

நடப்பாண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் மரணங்கள்!

image

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 2025-ம் ஆண்டில் இந்தியாவில், இதுவரை பல்வேறு பொது இடங்களில் கூட்ட நெரிசலால் ஏராளமான துயரமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். கரூரில் இதுவரை 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

News September 27, 2025

கரூர் துயரம்: ஜனாதிபதி திரெளபதி முர்மு வேதனை

image

கரூர் துயரம் மிகுந்த வேதனை அளிப்பதாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். விஜய்யின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!