News September 27, 2025

விஜய் குறிப்பிட்ட முதல்வர் ப.சுப்பராயன்

image

இன்று தனது பிரசாரத்தில் விஜய், இடஒதுக்கீடு ஆணையை பிறப்பித்த CM என்று நாமக்கல்லை சேர்ந்த ப.சுப்பராயனை குறிப்பிட்டார். 1926-ல் மெட்ராஸ் மாகாண CM-மாக பதவி வகித்தவர் ப.சுப்பராயன். விஜய் கூறிய அரசாணையின்படி (Communal G. O. 1071), அரசு வேலை & கல்வி வாய்ப்புகளில் பிராமணரல்லாதோருக்கு 5/12 பங்கு, பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 2/12, தாழ்த்தப்பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது.

Similar News

News January 17, 2026

காங்கயம்: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

ஈரோட்டை சேர்ந்த லோகநாதன், காங்கயம் நாட்டார்பாளையத்தில் தங்கித் தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகன் அஸ்வித், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காங்கயம் GHக்குக் கொண்டு சென்றும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

162 காலியிடங்கள், ₹32,000 சம்பளம்.. APPLY NOW

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) 162 Development Assistant பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹32,000. ➤கல்வி தகுதி: Any Degree. ➤வயது வரம்பு: 21 – 35. ➤தேர்வு முறை: Preliminary Examination (Online), Main Examination (Online), Language Proficiency Test. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3. விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.nabard.org<<>> வாயிலாக அப்ளை பண்ணுங்க. SHARE.

News January 17, 2026

EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

image

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.

error: Content is protected !!