News September 27, 2025
மூலிகை குளியல் ட்ரை பண்ணுங்க!

மூலிகை நீர் குளியல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இதனால், உடல் புத்துணர்வு ஏற்பட்டு, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. எந்த மூலிகை நீரில் குளித்தால், என்ன பயன் என்று? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் குறிப்பிட்டுள்ள மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.
Similar News
News September 27, 2025
கரூர் சோகம்: அமித்ஷா வேதனை

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால், ஆழ்ந்த வேதனை அடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 27, 2025
கரூர் துயரத்திற்கு காரணம் என்ன?

கரூர் கூட்ட நெரிசலுக்கு, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் குறுகிய இடமாக இருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. விஜய்யை காண நீண்ட நேரமாக அங்கு மக்கள் காத்திருந்தனர். மாலை என்பதால் குழந்தைகள், சிறுவர்களையும் அதிகளவில் உடன் அழைத்து வந்துள்ளனர். விஜய் வந்தபோது அங்கு நிற்க இடமின்றி பலர் மரம், கம்பங்களில் ஏறியுள்ளனர். விஜய் சென்ற பிறகே மயக்கமடைந்தவர்களை மீட்க முடிந்ததாக போலீசார் கூறியதாக தெரிகிறது.
News September 27, 2025
கரூர் நிகழ்வு நெஞ்சை உலுக்குகிறது: ரஜினி

கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். காயமடைந்தோருக்கு தனது ஆறுதல்கள் எனவும் ரஜினி கூறியுள்ளார்.