News September 27, 2025
திமுக ஆட்சியை விஜய் அம்பலப்படுத்துகிறார்:தமிழிசை

திமுக ஆட்சியை விஜய் அம்பலப்படுத்தி கொண்டிருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுவதால் திமுகவை எதிர்ப்பதிலேயே அவரது கவனம் தொடரட்டும் என்றும் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் போலீஸுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருப்பதாகவும் தமிழிசை பேசினார்.
Similar News
News September 27, 2025
கரூர் விரையும் EPS

அதிமுக பொது செயலாளார் எடப்பாடி பழனிசாமி நாளை கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார். அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேலும், தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
News September 27, 2025
CM ஸ்டாலின் அவசர ஆலோசனை!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் CM ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். தலைமை செயலாளர் முருகானந்தம், அமைச்சர் நேரு, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இன்று இரவே தனி விமானம் மூலம் CM ஸ்டாலின், திருச்சி வழியாக கரூர் செல்கிறார்.
News September 27, 2025
கரூர் துயரம்: முன்பே கணித்த ஆனந்த்

தமிழகத்தில் 50 இளைஞர்கள் உயிரிழக்கும் அளவுக்கு நெரிசல் விபத்து நேரிடும் என 2 வாரங்களுக்கு முன்பே ஒருவர் கணித்தது, தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. X-ல் ஆனந்த் (@arathu1702) என்பவர் செப்.13-ம் தேதி பதிவில், மூளையற்ற விஜய்யின் ரசிகர்கள் திமுகவினரை விட மோசமானவர்கள். குறைந்தது 50 பேர் பலியாகும் அளவுக்கு விஜய்யால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று அவர் விமர்சித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?