News September 27, 2025
ADMK – BJP, DMK – BJP, TVK – BJP யார் யாருடன் கூட்டணி?

நாமக்கல் பிரச்சாரத்தில் விஜய் புதிய குண்டை வீசியுள்ளார். பொதுவெளியில் சண்டைபோடும் திமுகவும், பாஜகவும் மறைமுகமாக உறவு வைத்துள்ளதாகவும், திமுகவுக்கு போடும் ஓட்டு, பாஜகவுக்கு போடும் ஓட்டுதான் எனவும் கூறியுள்ளார். முன்னதாக விஜய் பாஜகவின் அங்கம் எனவும், அதிமுக, பாஜகவில் கரைந்துவிட்டதாகவும் திமுக விமர்சித்து வருகிறது. யார் யாருடன் மறைமுக கூட்டணி? என்பது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 27, 2025
குளறுபடிகளே உயிரிழப்புக்கு காரணம்: அன்புமணி

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும் கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள்தான் இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்
News September 27, 2025
கரூர் விரையும் CM ஸ்டாலின்

கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில், CM ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதேபோல், சம்பவ இடத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில், நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார்.
News September 27, 2025
தவெக தலைவர் விஜய் கைது ஆகிறாரா?

கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட் கூறியிருந்தது.