News September 27, 2025

கிச்சனில் கறையா? ஈஸியா கிளீன் பண்ணலாம்

image

ஸ்டவ், சமையல் மேடை, ஸ்டவ்வின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலையே வேண்டாம். சாதாரண துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவை சோடாவை கலந்து, பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென பளபளக்கும்.

Similar News

News January 16, 2026

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News January 16, 2026

யாருடன் கூட்டணி: ராமதாஸ் புதிய ஸ்கெட்ச்

image

தொகுதி எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான், அதிமுக கூட்டணியில் அன்புமணி (பாமக) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமதாஸ் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட, கூடுதலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

News January 16, 2026

ஜல்லிக்கட்டு நாயகன் கீழையூர் டொங்கான் காலமானார்

image

ஜல்லிக்கட்டு நாயகன்களில் முக்கியமானவரான கருப்பணன்(எ) கீழையூர் டொங்கான் உடல்நலக்குறைவால் காலமானார். 1965-ல் முக்கம்பட்டியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவினார். ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்கிய இவர், இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்தியுள்ளார். பொங்கல் நாளில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!