News September 27, 2025

ஈபிள் டவர் விற்பனைக்கா? இது பெரிய உருட்டா இருக்கே

image

1925ம் ஆண்டு விக்டர் லுஸ்டிக் என்பவர் வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றைச் செய்துள்ளார். ஈபிள் டவரை ஒருமுறை அல்ல இரண்டுமுறை விற்பனை செய்துள்ளார். தன்னை ஒரு பிரெஞ்சு அரசாங்க அதிகாரியாக காட்டிக்கொண்டு, பராமரிப்பு செலவு காரணமாக அரசாங்கம் ஈபிள் டவரை விற்பதாக, செல்வந்தர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இவர் பேராசையை பயன்படுத்தி துணிச்சலுடன் புத்திசாலித்தமான பல மோசடிகள் செய்துள்ளார்.

Similar News

News September 27, 2025

உயிரிழப்புக்கு என்ன காரணம்?

image

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தை விட விஜய் 5, 6 மணிநேரம் தாமதமாக வந்தது, குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கில் கட்டுப்பாடில்லாமல் மக்கள் திரண்டது, எச்சரிக்கையை மீறி குழந்தைகளை அழைத்து வந்தது – இவற்றை தவிர்த்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

News September 27, 2025

BREAKING: கரூரில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

News September 27, 2025

விஜய் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது: பொன்னார்

image

அதிமுக – பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விஜய் விமர்சித்ததை பொன்.ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். விஜய் இன்று பிறந்த குழந்தை எனவும், இந்த விஷயத்தை இத்துடன் விடுவது அவருக்கு நல்லது என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல், விஜய்யின் பிரசாரம் அரசியல் போன்று இல்லை, அவர் சினிமாவில் நடிப்பது போலவே உள்ளதாகவும், அவருக்கு அரசியல் தெரியுமா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!