News September 27, 2025
ALERT வேலூரில் டிஜிட்டல் கைது பேரில் வரும் அழைப்புகள்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த மூதாட்டிக்கு(72) கடந்த 20ம் தேதி டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் தீவிரவாத தடுப்பு போலீசார் என கூறி, மூதாட்டிக்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து பணம் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி அவர் வங்கி கணக்கில் இருந்த 21.30 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
வேலூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
வேலூர்: லிங்க்கை கிளிக் செய்த நபர்.. ரூ.60.லட்சம் அபேஸ்!

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மர்மமான இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை க்ளிக் செய்த அவர், அதில் வந்த ஆசை வார்த்தைகளை நம்பி ரூ.60.88 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். பின் அந்த பெண் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிசெய்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னரே அந்த பெண் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
News January 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


