News September 27, 2025
குன்னூர் ரயில் நிலையத்தில் சோதனை!

ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, குன்னுார் ரயில் நிலையத்தில், சோதனை நடந்தது. குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.போலீசார் கூறுகையில், ‘ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும்,’ என்றனர்.
Similar News
News January 13, 2026
குன்னூரில் வெளுத்த மழை

குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்குள்ள வீட்டின் மதில் சுவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
நீலகிரி: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News January 13, 2026
பொங்கல் பரிசு: நீலகிரி மக்களே உஷார்

நீலகிரி மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.


