News September 27, 2025
ஜாலியாக சுற்றிவர சூப்பர் ரயில் பயணங்கள்

இந்தியாவில் சுவாரசியமான சாலை வழி பயணங்கள் ஏராளமானவை உள்ளன. அதேபோல் ரயில் பயணங்களும் உள்ளன. அதில், ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த ரயில் பயணங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் செய்த பயணம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 27, 2025
விடுமுறையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்

விடுமுறையில் சுற்றுலா செல்வது உடலுக்கு ஓய்வும், புத்துணர்வும் அளிக்கும். மனதுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் தருகிறது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட மிகவும் உதவுகிறது. ஆனால், எங்கே சுற்றுலா செல்வது என்று குழப்பமாக உள்ளதா? உங்களுக்காக மேலே சில இடங்களை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க செல்ல விரும்பும் இடத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
சற்றுமுன்: ரமேஷ் பிரேதன் காலமானார்

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ரமேஷ் பிரேதன்(61) காலமானார். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான ரமேஷ், ஆரம்பத்தில் எழுத்தாளர் பிரேமுடன் சேர்ந்து செயல்பட்டார். பின் தனியே எழுதி வந்தார். இவர் பின்நவீனத்துவம், நுண்ணரசியல், கவிதைகள், கதைகள் என பல தளங்களில் செயல்பட்டு வந்தார். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ரமேஷ் இன்று புதுச்சேரியில் காலமானார். ஆழ்ந்த இரங்கல்!
News September 27, 2025
செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த விஜய்

கரூரில் பிரச்சாரம் செய்த விஜய், செந்தில் பாலாஜியை மறைமுகமாக அட்டாக் செய்தார். கரூர், இந்திய அளவில் பிரபலமாக அவர் காரணமாக இருந்ததாக சாடினார். ED வழக்கில் அவர் சிறை சென்றது தேசிய அளவில் பேசப்பட்டதை மறைமுகமாக பேசியுள்ளார். மேலும், கரூரில் விமான நிலையம், பேரீச்சை உற்பத்தி வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் உள்ளதாக விமர்சித்தார்.