News April 13, 2024

கல்வீச்சு சம்பவத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

image

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீதான கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கான செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும், மரியாதையையும் நிலைநாட்ட வேண்டும். அவர் விரைந்து குணமடைய விழைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Similar News

News September 9, 2025

இதை செய்தால் வீட்டில் பணமழை கொட்டும்!

image

வாஸ்து சாஸ்திரங்களின் படி,
➮வீட்டில் ஓடாத கடிகாரங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
➮உடைந்த கண்ணாடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும்.
➮எதிர்பாராத விதமாக நடந்தாலும், எரிந்த துணி ஒன்றை வீட்டில் வைத்திருப்பது கெட்ட சகுனத்தின் அடையாளம்.
➮போட்டோக்களின் சட்டகம்(Frame) உடைந்து இருக்கக்கூடாது. இவற்றை சரி செய்தால், வீட்டில் பணமழை கொட்டும். இதனை உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 9, 2025

ஆஸி., வாழ் இந்தியர்களை சுற்றும் சர்ச்சை

image

ஆஸ்திரேலிய ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கவே, இந்தியர்கள் அதிகளவு குடியேற்றப்படுவதாக அந்நாட்டு செனட்டர் ஜசிந்தா கூறியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்து இந்திய சமூகத்தை காயப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு PM அந்தோனி அல்பனீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில், இந்திய குடியேற்றத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் மெகா பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 9, 2025

கோடிகளை அள்ளும் CSK வீரர் பிரெவிஸ்

image

தென்னாப்பிரிக்க வீரர் பிரெவிஸுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், SA20 சீசன் 4 ஏலத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அவரை ₹8.30 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த லீக்கில் இதுதான் உச்சபட்ச தொகையாகும். CSK அணிக்காக விளையாடும் இவரை பேபி ABD என்று அழைக்கின்றனர். மற்றொரு வீரரான மார்க்கரமை டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.

error: Content is protected !!