News September 27, 2025

+2 போதும்.. மத்திய அரசில் ₹25,500 சம்பளத்தில் வேலை!

image

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள 552 Head Constable பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். மாதம் ₹25,500- ₹81,100 வரை வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

Similar News

News January 19, 2026

டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை

image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவராக இருக்கும் நிதின் நபின் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இதனால், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கட்சித் தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை விரைந்துள்ளார்.

News January 19, 2026

தீ பரவட்டும் என்றால் நடுங்குகின்றனர்: உதயநிதி

image

அண்ணா பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறதாக சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்று நிகழ்ச்சியில் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் ‘தீ பரவட்டும் என்று சொன்னால்’ இன்றைக்கும்கூட சிலர் பயந்து நடுங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற தீ பரவட்டும் என்ற வார்த்தையை தணிக்கை குழு நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

image

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.

error: Content is protected !!