News September 27, 2025

அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை: விஜய் நையாண்டி

image

பிரசாரத்தில் ஏதாவது புதுசா பேசுங்க விஜய் என விமர்சனம் வைத்தவர்களுக்கு நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் கிண்டலாக பதிலளித்துள்ளார். புதுசா என்ன பேசுறது.. அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை போடப்படும், செவ்வாய் கிரகத்தில் IT கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என CM மாதிரி அடிச்சி விடுவோமா என தொண்டர்களை பார்த்து கேட்டார்.

Similar News

News January 12, 2026

புதுக்கோட்டை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.<<>>in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

தமிழர்களை இழிவாக பேசிய ராஜ் தாக்கரே!

image

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி <<18824079>>அண்ணாமலை<<>> பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கும், அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம் என ராஜ் தாக்கரே (நவநிர்மான் சேனா) கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணாமலையை ரசமலாய் என விமர்சித்த அவர், தமிழர்களை தரக்குறைவாக கூறும் பால் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய ‘உத்தாவ் லுங்கி, பஜாவ் புங்கி’ என்ற முழக்கத்தை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News January 12, 2026

BIG NEWS: 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கம்

image

பாமக MLA-க்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம், தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களை நீக்குவதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பது ராமதாஸ் – அன்புமணி இடையே போட்டி நிலவும் நிலையில், இந்த நீக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!