News September 27, 2025

காஞ்சியில் மிதிவண்டி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

image

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று (27-9-25) பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News January 15, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் (15.01.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News January 15, 2026

காஞ்சிபுரம்: ஒரே இடத்தில் ஐந்து பெருமாள்கள்…

image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை (ஜன.16) மாட்டுப்பொங்கல் அன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாலை 5:30 மணிக்கு திருமுக்கூடல் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிங்க பெருமாள், சாலவாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள், காவந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் ஆகியோர் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

News January 15, 2026

காஞ்சி: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா..

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்

error: Content is protected !!