News September 27, 2025
தருமபுரி: குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், 20,109 பேர் எழுதவுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில், 20,109 தேர்வர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 9, 2026
தருமபுரி: 250 கோழிகள் இலவசம்!

தருமபுரி மக்களே! தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
தருமபுரி: காஸ் சிலிண்டர் யூசரா ? உங்களுக்கு தான்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜனவரி 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டால் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின் அஞ்சல் ddtextilessalemregional@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.


