News September 27, 2025

இது சட்ட விரோதம் – ஜவாஹிருல்லா

image

மனிதநேய மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது சட்ட விரோதமான செயல். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு தொடர உள்ளோம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விழுப்புரத்தில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Similar News

News February 1, 2026

விழுப்புரம்: ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது!

image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அப்பு (எ) ஜவகர், ரவுடி. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி, கோட்டக்குப்பம் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் ஹேமத்குமார், அவரது சகோதரர் வசந்த், கிரி தமிழ்மணி கோகுல் உள்பட ஒரு சிறுவன் கைது

News February 1, 2026

விழுப்புரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

விழுப்புரம் அருகே அதிரடி கைது!

image

செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் போலீசார் நேற்று (ஜன.31) பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன்,என தெரியவர அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!