News September 27, 2025
ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்: ஜெயக்குமார்

மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான் உள்ளார் என்றும் மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சீமானுக்கு மறை கழன்றுவிட்டதாகவும் சைகை காண்பித்து அவர் விமர்சித்தார்.
Similar News
News January 13, 2026
திருப்பூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)
News January 13, 2026
வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
News January 13, 2026
பொங்கல்: மல்லிகைப்பூ விலை ₹6,000 குறைந்தது

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.


