News September 27, 2025
அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில், காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்று (செப்டம்பர் 27) தொடங்குகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
விடுமுறைக் காலத்திலேயே, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி விடுமுறையாக இருந்தாலும், அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News January 12, 2026
விழுப்புரத்தில் கொடூரத்தின் உச்சம்!

விழுப்புரம், கண்டமானடியில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாபு, உணவு சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகள் வைஷ்ணவியை 17 சுவரில் தலையை மோதி கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்து 26 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பாபு மீதான வழக்கை, போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
திண்டிவனத்தில் இருவர் அதிரடி கைது!

திண்டிவனம் சந்தைமேடு கூட்டுரோட்டில் ரோஷணை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகளைச் சோதனையிட்டதில், மொத்தம் 330 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நடராஜன் (48) மற்றும் சிற்றரசன் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த்தனர்.
News January 12, 2026
விழுப்புரம்: வேன் கவிழ்ந்து விபத்து

கோட்டகுப்பம் அருகே ECR சாலையில் நேற்று வேன் மோதி கம்பிகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கம்பிகளை ஏற்றிச் சென்ற வேன் சின்ன முதலியார் சாவடி அருகே நின்று கொண்டு இருந்த டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் டிரைவர்கள் தப்பித்தனர். கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


