News April 13, 2024
திருமாவளவனை சந்தித்த தியாகராஜன் குமாரராஜா!

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளராக போட்டியிடும் திருமாவளவன், வீடு, வீடாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் திருமாவளவனை இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
Similar News
News December 21, 2025
நாகை: கிரைண்டர் வாங்க ரூ.5,000 !

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
News December 21, 2025
பிரபல நடிகர் காலமானார்.. கண்ணீருடன் அஞ்சலி PHOTO

பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மம்மூட்டி, மோகன்லால், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மம்மூட்டி, மோகன்லால், ஸ்ரீனிவாசன் ஆரம்ப காலத்தில் இருந்தே விட்டுக்கொடுக்காத நண்பர்களாக இருந்தனர். தற்போது நண்பன் இல்லையே என்ற வேதனையில், ஸ்ரீனிவாசனின் காலடியில் இறுதிவரை வாடிய முகத்துடன் இருவரும் அமர்ந்திருந்தனர்.
News December 21, 2025
10th Pass போதும், ₹21,000 சம்பளம்: மத்திய அரசில் வேலை

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை. சம்பளம்: ₹21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <


