News September 27, 2025

தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

தூத்துக்குடி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in <<>>என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News January 12, 2026

திருச்செந்தூரில் லாரி மோதி தலை நசுங்கி உயிரிழப்பு

image

திருச்செந்தூர் மெயின் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே லாரி ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பூ ஏற்றி சென்ற ஏரல் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பிரேம்குமாரின் தலை, லாரி சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 12, 2026

துத்துக்குடி: கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா

2.விற்பனை சான்றிதழ்

3.நில வரைபடம்

4.சொத்து வரி ரசீது

5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!