News September 27, 2025

வேலூர்: ஆதார் கார்டு குறித்து முக்கிய அப்டேட்!

image

வேலூர் மக்களே! வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

Similar News

News January 31, 2026

வேலூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரன்!

image

இ.பி.கூட்ரோட்டில் சரவணவேல் என்பவரது உணவகத்தில் தேவேந்திரன் மற்றும் அரவிந்த் என்பவர்கள் சாப்பிட வந்தனர். அப்போது இவர்களுடன் ஏற்பட்ட தகராறில் சரவணவேல் கொதிக்கும் எண்ணெயை அரவிந்த் மீது ஊற்றி உள்ளார். இதனால் வலியால் துடித்த அரவிந்த், திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று (ஜன.30) குண்டர் சட்டத்தில் சரவணவேலை சிறையில் அடைத்தனர்.

News January 31, 2026

வேலூர் மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு விழா!

image

வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டும் விழா நேற்று (ஜன.30) நடைபெற்றது. இவ்விழாவில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 31, 2026

வேலூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

image

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

error: Content is protected !!