News September 27, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஈரோடு: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் இங்கே <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
Similar News
News January 10, 2026
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 10, 2026
ஈரோடு அருகே வசமாக சிக்கிய 4 பேர்: போலீஸ் அதிரடி

புஞ்சைபுளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி குளக்கரையில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட நவீன் குமார், லட்சுமணன், லோகநாதன், ரவி ஆகிய 4 பேரை சுற்றி வளைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த ரூ. 50000 மற்றும் 4 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News January 10, 2026
கவுந்தப்பாடி அருகே விபத்து: ஒருவர் பலி

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவரது நண்பர் தங்கராஜ். இருவரும் பைக்கில் கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக எதிரே வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிகிச்சை பலனின்றி சரவணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புகாரின் படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


