News September 27, 2025

நாமக்கல்: EXAM இல்லை 10th தகுதி 1,096 காலியிடங்கள்!

image

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க

Similar News

News January 18, 2026

நாமக்கல்லில் இன்று ஜல்லிக்கட்டு!

image

எருமப்பட்டி கைகாட்டியில், இன்று காலை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். இதில் காளைகள் பங்கேற்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. போட்டியில் 600 காளைகளுக்கு, ‘டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாடுபிடி வீரர்கள், 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி., விமலா தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News January 18, 2026

நாமக்கல்லில் அதிரடி: 12 பேர் கைது!

image

நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பெட்டிக்கடைகள் மற்றும் சந்து பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 594 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 18, 2026

நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!